தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாகித்திய அகாதமி விருதாளர் தேவி பிரியா காலமானார்! - தேவி பிரியா

தெலுங்கு பாடலாசிரியரும், சாகித்திய அகாதமி விருதாளருமான தேவி பிரியா காலமானார். அவருக்கு வயது 69.

Poet Devi Priya passes away Sahitya Akademi awardee Devi Priya Telugu poet Devi Priya சாகித்திய அகாடமி தேவி பிரியா தெலங்கானா
Poet Devi Priya passes away Sahitya Akademi awardee Devi Priya Telugu poet Devi Priya சாகித்திய அகாடமி தேவி பிரியா தெலங்கானா

By

Published : Nov 21, 2020, 6:41 PM IST

Updated : Nov 21, 2020, 10:23 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சாகித்திய அகாதமி விருதாளர் தேவி பிரியா சனிக்கிழமை (நவ.21) காலை காலமானார். அவருக்கு வயது 69.

தேவி பிரியாவின் மறைவுக்கு தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எழுத்தாளர் தேவி பிரியா தனது எழுத்துக்கள், பாடல்கள், கட்டுரைகள் மூலமாக சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க முயன்றார்.

அவரின் படைப்பில் ஹாலி ரங்கு சமூகத்தின் குரலாக என்றென்றும் பிரதிபலிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தேவி பிரியாவின் ஹாலி ரங்கு படைப்புக்கு 2017ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஹரிபி கீதாலு, அம்மா சேத்து சேப்பா சிலுகா உள்ளிட்டவை தேவி பிரியாவின் படைப்புகளில் புகழ்பெற்றவை ஆகும்.

இதையும் படிங்க: எழுத்தாளர் சா. கந்தசாமியின் மறைவிற்கு இயக்குநர் தங்கர்பச்சான் இரங்கல்!

Last Updated : Nov 21, 2020, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details