சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த சந்திரசேகர் ராவிற்கு திருப்பதி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தும்மகுண்டலாவில் உள்ள வெங்கேடஸ்வர கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனை செய்தனர். இதனையடுத்து சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தெலங்கானா முதலமைச்சர்! - chandrasekara rao
அமராவதி: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
![திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தெலங்கானா முதலமைச்சர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3392640-thumbnail-3x2-cmchandrasekar.jpg)
சந்திரசேகர ராவ்
மேலும், 2018ஆம் ஆண்டு சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்துடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : May 27, 2019, 12:30 PM IST