இரு நிறுவனங்களையும் அர்த்தமுள்ள வழியில் புதுப்பிக்கவில்லை. இப்போதைய நடவடிக்கை தனியார் நிறுவங்களுடன் போட்டிகளை உருவாக்கி, நடத்துவதற்கான செலவுகளை மட்டுமே அது ஈட்டும் என்ற உணர்வை தொழில் வல்லுநர்கள் கொண்டுள்ளனர்.
அரசாங்கம் நீண்ட காலத்திற்கு முன்னரே பெரிய சீர்திருத்தங்களையும் கடுமையான மறுசீரமைப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியும். மேலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களை கண்காணிக்க போதுமானதாக இல்லை.
இந்த இணைப்பும், முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வூதியத் திட்டமும் சேர்ந்து, செயல்பாட்டு செலவுகளைத்தான் குறைக்க உதவும். ஆனால் அது அதன் எதிர்காலத்தை வளப்படுத்த போதுமானதாக இருக்காது. ஒரு காலத்தில் செழிப்பான நிறுவனமாக இருந்த பி.எஸ்.என்.எல், தற்போது நோய்வாய்ப்பட்டு ரூ.90,000 கோடிக்கு மேல் இழப்பில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற வேகமான மற்றும் திறமையான தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட பிஎஸ்என்எல் இயலாமையின் விளைவு இதுவாகும்.
1,76,000 தொழிலாளர் தொகுப்பைக் கொண்டு, பி.எஸ்.என்.எல் வெறுமனே போட்டியிட முடியாது. தொலைதொடர்பு துறை வல்லுநர்களின் கூற்றுப்படி, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரண்டிலும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை, 'ஏகபோக' சகாப்தத்தைச் சேர்ந்த ஊழியர்களை, இன்றைய தீவிர போட்டிச் சூழலுக்கு ஏற்றவாறு அவர்களின் மனநிலையை மாற்றுவதில் ஏற்பட்ட தோல்வியும் அவற்றின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.
மொபைல் பிரிவில் கடுமையான போட்டியால் குறைந்த கட்டண விகிதம் , பணியாளர்களுக்கான அதிக செலவு மற்றும் தொலைத் தொடர்பு சந்தையில் 4 ஜி சேவைகள் (சில இடங்களில் தவிர) இல்லாததால், பிஎஸ்என்எல் நட்டத்துக்கான பிற முக்கிய காரணங்களாகும்.
ரிலையன்ஸ் ஜியோ சந்தையை ஆக்கிரமித்து 2016 இல் நுழைந்த பின்னர் பொதுத்துறை நிறுவனம் அதன் வருவாயில் சரிவைக் கண்டது. ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்புத் துறையை அதன் மிக குறைந்த அதிரடி விலை நிர்ணயம் மூலம் உலுக்கியது.