தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிறைமாத கர்ப்பிணிக்கு அலட்சியம் காட்டிய மருத்துவமனைகள் - தாயும், சேயும் உயிரிழந்த சோகம் - தேசியச் செய்திகள்

ஹைதராபாத்: மருத்துவமனைகள் அலட்சியம் காட்டியதே, தன் மனைவி இறப்பிற்குக் காரணம் என உயிரிழந்த பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Telangana
Telangana

By

Published : Apr 29, 2020, 5:03 PM IST

தெலங்கானா மாநிலம், கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல், மருத்துவமனைகள் அப்பெண்ணை அலைக்கழித்ததால் அப்பெண்ணும், பிறந்து ஒரே நாளான அவரின் ஆண் குழந்தையும் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அப்பெண்ணின் கணவர் மகேந்தர், 'என் மனைவிக்கு பிரசவம் பார்க்காமல் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் அலட்சியம் காட்டியது தான் என் மனைவியின் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தது’ என்றார்.

கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

கடந்த 24ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஆரம்பித்தபோது, அவரை அழைத்துக்கொண்டு அவரது கணவர், கட்வால் நகர மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், ரத்த சோகை, ரத்த அழுத்தம் காரணமாக ஆந்திராவில் உள்ள கர்னூல் நகர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள், அவர்களை அறிவுறுத்தினர்.

ஊரடங்கு காரணமாக 50 கி.மீ., தூரத்தில் உள்ள கர்னூலுக்கு அவர்கள் செல்ல முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் தான் அதிக அளவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம்.

இதனையடுத்து மகாபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தன் மனைவியை மகேந்தர் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் ஹைதராபாத் செல்லுமாறு அவர்களிடம் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். கட்வால் பகுதியிலிருந்து வந்ததால் அப்பெண்ணுக்கு கரோனா தொற்று சோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். சோதனையில் கர்ப்பிணிக்கு கரோனா இல்லை என உறுதியானது.

இதனையடுத்து பெட்லா பூர்ஜில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அப்பெண்ணை மருத்துவர்கள் மாற்றினர். அங்கு ஏப்ரல் 26ஆம் தேதி அப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஆனால், சுவாசக் கோளாறு காரணமாக குழந்தையை வேறோரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மாற்றினர். அந்த மருத்துவமனையில் பிறந்து ஒரே நாளே ஆன அக்குழந்தை இறந்துவிட்டது. அதுமட்டுமின்றி குழந்தையின் தாயின் நிலைமையும் மோசமாகிவிட்டதால், உஸ்மானியா மருத்துவமனைக்கு ஏப்ரல் 27ஆம் தேதி திங்களன்று அப்பெண் மாற்றப்பட்டார். அங்கு அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் மருத்துவ வசதிகள் தடையில்லாமல் கிடைக்கும் என மத்திய, மாநில அரசுகள் கூறிவருகின்றன. ஆனால், மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமாக நிறைமாத கர்ப்பிணியை பல கி.மீ., அலைய வைத்த காரணத்தால் இன்று அப்பெண்ணும், அப்பெண்ணின் குழந்தையும் இறந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அறிக்கை சமர்ப்பிக்கமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:கர்ப்பிணி பெண்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details