தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பெண் கவுன்சிலர் கோவிட் -19 காரணமாக திங்கள்கிழமை காலமானார் என அம்மாநில அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இவர் ஜூன் 30ஆம் தேதி ஹைதராபாத்தில் தெலங்கானா அரசு நடத்தும் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்பு ஜூலை 3ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். மாநிலத்தில் வைரஸ் தொற்றால் இறந்த முதல் பொது பிரதிநிதி இவர் என தெரியவந்துள்ளது.
கரோனாவால் தெலுங்கானா பெண் கவுன்சிலர் உயிரிழப்பு! - கரோனாவால் தெலுங்கானா பெண் கவுன்சிலர் உயிரிழப்பு
ஹைதெராபாத்: சங்காரெட்டி நகராட்சியின் கவுன்சிலர் கோவிட் -19 வைரஸ் தொற்றால் இன்று ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் காலமானார்.
கரோனாவால் தெலுங்கானா பெண் கவுன்சிலர் உயிரிழப்பு
கடந்த ஒரு மாதமாக தெலங்கானா மாநிலத்தில் கரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துவருகின்றன.இது வரை கரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,902ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ’ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்’