தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல்!

ஹைதராபாத்: தெலங்கானாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்துக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Health Minister  Telangana  Gandhi Hospital  COVID-19  attack on health workers  தெலங்கானாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல்  மருத்துவர்கள் மீது தாக்குதல்  தப்லிக் மாநாடு, கரோனா அச்சம், கோவிட்19 பாதிப்பு
Health Minister Telangana Gandhi Hospital COVID-19 attack on health workers தெலங்கானாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் மருத்துவர்கள் மீது தாக்குதல் தப்லிக் மாநாடு, கரோனா அச்சம், கோவிட்19 பாதிப்பு

By

Published : Apr 3, 2020, 2:22 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள தனிமை வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி, மருத்துவமனையின் 8ஆவது மாடியிலுள்ள தனிமை வார்டில் கரோனா தொற்று நோயாளி ஒருவர் உயிரிழந்தார். அப்போது இறந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈதால ராஜேந்திரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இதுபோன்ற நடவடிக்கைகளை எங்களால் மன்னிக்க முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றார். மேலும், “மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். அவர்களை அடிப்பதில் உங்களுக்கு என்ன பயன்” என்றும் கேள்வியெழுப்பினார்.

தெலங்கானாவில் ஒன்பது பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: இஸ்ரோ ஊழியர்கள் ரூ.5 கோடி நிதியுதவி!

ABOUT THE AUTHOR

...view details