தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா பாஜக பிரமுகர் மகன் மீது மாடல் அழகி புகார்.! - BJP leader clash at hotel

ஹைதராபாத்: தெலங்கானா பாஜக தலைவர் மகன் மீது காவல் நிலையத்தில் மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Telangana: Son of BJP leader booked for 'outraging modesty' of model
Telangana: Son of BJP leader booked for 'outraging modesty' of model

By

Published : Dec 1, 2019, 11:28 PM IST


தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் 27 வயதான மாடல் அழகி ஒருவர், தெலங்கானா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நந்தேஷ்வர் கவுடு, இவரது மகன் ஆஷிஷ் கவுடு மீது மந்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில், ஆஷிஷ் கவுடு ஞாயிற்றுக்கிழமை (டிச1) ஓட்டலில் வைத்து தவறாக நடந்துக் கொண்டார். அவரின் செயலிலும் பேச்சிலும் வக்கிரம் தெரிந்தது.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண்களுக்கெதிரான குற்றங்கள்) மற்றும் 509 (ஆபாசமாக திட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குப்பதிவு தொடர்பாக பதிலளித்த ஆஷிஷ் கவுடு, அவர் உண்மையை பேச வேண்டும். அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளது. அவருக்கு பின்னால் எதிர்கட்சியினரின் அரசியல் உள்ளது. இந்த பொய் வழக்கு மற்றும் அச்சுறுத்தல் அரசியலுக்கு நான் பயப்பட மாட்டேன்” என்றார்.

இதையும் படிங்க : தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்.!

ABOUT THE AUTHOR

...view details