தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆபரேஷன் ஸ்மைல்' - தெலங்கானாவில் 3,600 குழந்தைகள் மீட்பு - ஆபரேஷன் ஸ்மைல்

ஹைதராபாத் : தெலங்கானாவில் ஆபரேஷன் ஸ்மைல் நடவடிக்கை மூலம் 3,600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

Telangana police rescue 3600 children in Operation Smile
Telangana police rescue 3600 children in Operation Smile

By

Published : Feb 3, 2020, 7:15 AM IST

தெலங்கானா காவல் துறையினர் ஜனவரி ஒன்றாம் தேதி 'ஆபரேஷன் ஸ்மைல்' என்ற நடவடிக்கையை தொடங்கினர். இந்த நடவடிக்கையை மாநிலம் முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரை நடத்தினர். இதில் 3,600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் காணாமல் போனவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், யாசகர்கள், கடத்தப்பட்டவர்கள் ஆகியோரை மீட்டனர்.

இந்த நடவடிக்கை குறித்து தெலங்கானா சட்ட ஒழுங்கு ஆணையர் சுவாதி லக்ரா கூறும்போது, “ஆபரேஷன் ஸ்மைல் நடவடிக்கை மூலமாக இதுவரை 3,600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,923 பேர் ஆண் குழந்தைகள், 677 பேர் பெண் குழந்தைகள்.

இதுதொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 411 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தக் குழந்தைகள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தும் இடங்கள், மெக்கானிக் கடைகள், செங்கல் சூளைகள், டீ கடைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் 13 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் மியான்மர் குழந்தைகள். இதுதவிர தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். 304 குழந்தைகள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கடத்தல் குழந்தைகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: பிரதமரின் பாதுகாப்புக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details