தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிர்பாராமல் நடந்த விபத்து: காவலர் உயிரிழப்பு - காவல் உதவி ஆய்வாளர்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது ஏ.கே. 47 ரக துப்பாக்கி தற்செயலாக இயங்கியதால் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

எதிர்பாராமல் நடந்த விபத்து: காவலர் உயிரிழப்பு
எதிர்பாராமல் நடந்த விபத்து: காவலர் உயிரிழப்பு

By

Published : Sep 16, 2020, 9:13 PM IST

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள சென்னபுரம் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் காவல் உதவி ஆய்வாளர் (ஆர்.எஸ்.ஐ.) ஆதித்யா சாய் குமார் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக பத்ராச்சலம் பகுதி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் தத் கூறுகையில், "உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றவர்களுடன் சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சிபிஐ (மாவோயிஸ்ட்) தெலங்கானாவில் அதன் நடவடிக்கைகளைப் புதுப்பிக்க முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து, எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். செப்டம்பர் 7ஆம் தேதி செர்லா மண்டலத்தில் காவல் துறையினருக்கும் மாவேயிஸ்டுகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா மாநிலக் குழு பாதுகாப்புப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற தகவலைத் தொடர்ந்து காவல் துறையினரின் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்றார்.

மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது துப்பாக்கிசூடு இதுவாகும். குண்டலா மண்டலத்தில் உள்ள தேவல்லகுடெம் கிராமத்திற்கு அருகே செப்டம்பர் மூன்றாம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details