தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரங்கல் 9 பேர் கொலை வழக்கு - ஒருவர் கைது - telanganan warangal murder news

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றிலிருந்து ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில், காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

warangal
warangal

By

Published : May 24, 2020, 11:01 PM IST

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ளது குரேகுண்டா என்ற கிராமம். இங்குள்ள ஒரு விவசாய நிலம் அருகே வெட்டப்பட்டுள்ள கிணறு ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது சடலங்கள் கண்டறியப்பட்டன.

இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட தெலங்கானா காவல் துறையினர் சஞ்சய் குமார் யாதவ் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், குளிர்பானத்தில் சஞ்சய்குமார் யாதவ் தான், தூக்க மாத்திரையைக் கொடுத்து, அந்த ஒன்பது பேரையும் கொலை செய்ததாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சஞ்சய்குமார் ஒன்பது பேரையும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஒன்பது பேரும் மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் மேலும் 765 பேருக்கு கரோனா உறுதி

ABOUT THE AUTHOR

...view details