தப்லீக் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பாக டெல்லியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதில் கலந்துகொண்ட 10 இந்தோனேசியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறியதாக இந்தோனேசியர்களுக்கு எதிராக வழக்கு - விதிகளை மீறியதாக இந்தோனேசியர்களுக்கு எதிராக வழக்கு
ஹைதராபாத்: தெலங்கானாவில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10 இந்தோனேசியர்களுக்கு எதிராக விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் விதிகளை மீறி தெலங்கானாவில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்தவித கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவர்களுடன் ஆறு உள்ளூர்வாசிகள் மீதும் பேரிடம் மேலாண்மை, பெருந்தொற்று ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர்கள் கரிம்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் கலந்துகொண்டுள்ளனர்.