ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குற்றவாளிகள் நான்கு பேரும் இன்று அதிகாலை காவல் துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவில் ஹைதராபாத் காவல் துறையினர் நனைந்துவருகின்றனர். இந்த என்கவுன்டர் நடவடிக்கையை துணிச்சலுடன் தலைமையேற்று நடத்திய காவல் ஆணையர் சஜ்ஜனார் அம்மாநில மக்கள் கொண்டாடும் உண்மையான கதாநாயகனாக மாறிவிட்டார்.
சஜ்ஜனார், சக காவல் துறையினருக்கு ஆதரவாக, 'ஜெய் போலீஸ், ஜெய் ஜெய் போலீஸ் ( #Jai Police! #Jai Jai Police) மற்றும் சாஹோ சஜ்ஜானார் (#Saaho Sajjanar)' உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் பிரபலம் அடைந்துவருகின்றன. இதுமட்டுமின்றி சஜ்ஜனாரை இணையவாசி ஒருவர், நிஜ வாழ்வில் சிங்கம் எனப் பாராட்டியுள்ளார்.