தெலங்கானா ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தெலங்கானா எம்எல்ஏ-க்கு கரோனா தொற்று! - தெலங்கானா டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ-விற்கு கரோனா தொற்று உறுதி
ஹைதராபாத்: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Finance Minister T Harish Rao
மேலும், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற உறுப்பினர்களையும் கண்டறியும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் வைத்து அவர்களைத் தேடிவருகின்றனர். இதற்கிடையே, அம்மாநில நிதி அமைச்சர் ஹரிஷ் ராவின் உதவியாளருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.