தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2020, 4:26 PM IST

ETV Bharat / bharat

பன்றிகள் தாக்கி சிறுவன் மரணம்: அறிக்கை கோருகிறது மனித உரிமைகள் ஆணையம்

தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்துள்ள புகாரின் பேரில், பன்றிகள் தாக்கி சிறுவன் இறந்தது குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு நகர குடிமை நிர்வாகத்துக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பன்றிகள் தாக்கி சிறுவன் மரணம்
பன்றிகள் தாக்கி சிறுவன் மரணம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் மனித உரிமைகள் ஆணையம், பன்றிகள் தாக்கி இறந்த சிறுவன் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளது.

பாலாலா ஹக்குலா சங்கம் (BHS), எனும் குழந்தைகளை கண்காணித்து வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று சிறுவன் இறப்பு குறித்து அறிக்கை கோருமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தது.

அந்தவகையில், சிறுவனின் இறப்புக் குறித்து, அறிக்கை சமர்பிக்க நகர குடிமை அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. சைதாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட சிங்கரேணி எனுமிடத்தில் நான்கு வயது சிறுவனை தெரு பன்றிகள் தாக்கியதில், அவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பன்றி தாக்கியதில் நான்கு வயது சிறுவன் மரணம்!

தன்னார்வ அமைப்பின் தலைவர் அசுயுத்தா ராவ், குழந்தைகளையும், பாதசாரிகளையும் தெரு நாய்க்களிடமிருந்தும், தெரு பன்றிகளிடமிருந்தும் மாவட்ட நிர்வாகம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details