தெலங்கானாவில் சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்றுவது, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்னிறுத்திக் கடந்த 5ஆம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசு குறித்த நாள்களுக்குள் பணிக்குத் திரும்பாததால், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கிட்டத்தட்ட 50 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
இது தொடர்பான போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. போக்குவரத்து சங்கங்களின் போராட்டக் குழுக்களின் அனைத்துத் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து தங்களுடைய நியாயமான கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.