தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்க செப்டம்பர் 1 ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ஆளுநராக தமிழிசை பதவியேற்றுக்கொண்டார்.
தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் ஆளுநர் ரோசையா! - தெலுங்கானா ஆளுநர்
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா, தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாழ்த்து கூறிய முன்னால் ஆளுநர்
ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநராக பதவி வகித்த ரோசையா தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
Last Updated : Sep 12, 2019, 1:50 PM IST