தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்: தமிழிசை வேண்டுகோள்! - பிளாஸ்மா தானம்

ஹைதராபாத்: கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

By

Published : Jul 20, 2020, 1:07 AM IST

ஹைதராபாத், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா பிளாஸ்மா ரத்த வங்கியை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், " பொதுமக்களிடையே பிளாஸ்மா தானம் குறித்து தவறான எண்ணங்கள் இருக்கக்கூடாது. குணமடைந்தவர்கள் கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான ஆன்டிபாடிகள் உள்ளவர்கள் மட்டுமே பிளாஸ்மாவை தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

நன்கொடையாளர்களுக்கு பிளாஸ்மா நன்கொடை குறித்து எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்க வேண்டியதில்லை. தகுதி வாய்ந்த நன்கொடையாளர்கள் அனைவரும் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவது மனிதாபிமான சேவை. ஆளுநராக அல்ல, தெலங்கானா மக்களின் சேவையில் என்னை ஒரு பாலமாக கருதுகிறேன்.

தெலங்கானாவின் முதல் குடிமகனாக அல்ல, ஆனால் பொதுமக்களில் ஒருவராக, நான் ஆக்கப்பூர்வமான பணிக்காக, ஒத்துழைக்க தயாராக உள்ளேன்.

தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடியுங்கள்" என்றார்.

இதையும் படிங்க:'பிளாஸ்மா தானம் கொடுக்க வருவோருக்கு அரசு சலுகைகள் தருக!' - வலுத்துவரும் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details