கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று தற்போது சீனாவில் குறைந்து வரும் வேளையில், மற்ற நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் 19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்! - Coronavirus in Telangana
16:39 March 14
ஹைதராபாத்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களையும் திரையரங்குகளையும் மூட வேண்டுமென தெலங்கானா அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல, இந்தியாவிலும் இதுவரை 84 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் 19 வைரஸ் தொற்றைத் தடுக்க இந்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே தெலங்கானாவில் ஒரு நபர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவதாக மற்றொரு நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் சமீபத்தில்தான் இத்தாலி சென்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக தெலங்கானாவில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் திரையரங்குகளையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட வேண்டுமென அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், தேர்வுகளைத் திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: பிகாரில் 144 தடை உத்தரவு