தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மால்தும்மேடா கிராமத்தை சேர்ந்தவர் கிஷ்டய்யா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு வாக்குவாதத்தில் தொடங்கிய நிலத்தகராறு பிரச்னை ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. கிஷ்டய்யாவை திடீரென மற்றொரு நபர் கட்டையால் பலமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.