தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

ஹைதராபாத்: தெலங்கானாவில் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா
தெலங்கானா

By

Published : Mar 17, 2020, 12:09 PM IST

தெலங்கானாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கும்,வணிக வளாகங்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதிவரை மூட உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தெலங்கானாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், 22 நபர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரவுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்தர் கூறுகையில்,"இந்தோனேசியாவிலிருந்து கோயில் பார்க்க வந்த 10 சுற்றுலாப் பயணிகளில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்த காரணத்தினால் அவர்கள் 10 பேரையும் , மூன்று உள்ளூர்வாசிகளையும் ஹைதராபாத்தில் அரசு காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது" என்றார்.

இதையும் படிங்க:கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வாளர் குழுவில் இந்தியர்!

ABOUT THE AUTHOR

...view details