ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் காவலராகப் பணிபுரியும் தயா லக்ஷ்மி நாராயணா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை வட்டார உதவி அலுவலரான தயா லக்ஷ்மி நாராயணா, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக வருமானவரித் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில், விசாரணை மேற்கொண்ட வருமானவரித் துறையினர், ஹைதராபாத், நல்கொண்டா, காமரெட்டி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில், அவர் வருமான ஆதாராங்கள் இல்லாமல் அதிகப்படியான சொத்துகளை வாங்கி குவித்தது உறுதியானது.
ஹைதராபாத், ரெங்காரெட்டி, காமரெட்டி, நல்கொண்டா, நிஜாமாபாத் மாவட்டங்களில் பணம், தங்கம், நிலம், வேளாண்மை நிலம், குடியிருப்பு வீடுகள் என சுமார் இரண்டு கோடியே 11 லட்சத்து 84 ஆயிரத்து 109 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவருக்கு இருந்துள்ளன.
இதையடுத்து, தயா லக்ஷ்மி நாராயணாவை கைதுசெய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.