தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி ராமா ராவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டின் உள்புறத்தைப் படம்பிடிக்க சட்டவிரோதமாக ட்ரோன் பயன்படுத்திய குற்றத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "ரேவந்த் ரெட்டி அவராகவே நரசிங்கி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கிருந்த காவல் துறையினரிடம் எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என சண்டையில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் எவ்வளவு கூறியும் அவர் அமைதியாகாத காரணத்தினால், அவரைக் கைதுசெய்து நீதிமன்றம் அழைத்துச் சென்றோம்" என்றார்.