நாடு முழுவதும் 17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தெலங்கானாவில் முதற்கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் தேர்தல் நடத்தை விதியை மீறுகிறார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு!
ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
telangana congress accuses kcr of misusing official residence writes to ec
இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது தெலங்கானா மாநில காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதில் முதலமைச்சர் அரசு இல்லமான பிரகதி பவனை சந்திரசேகர ராவ் தேர்தலுக்காக உபயோகிக்கிறார் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.