தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி' - தெலங்கானா முதலமைச்சர்

ஹைதராபாத்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.

Telangana CM Chandrasekara Rao thanks to TN CM Edappadi Palaniswami
Telangana CM Chandrasekara Rao thanks to TN CM Edappadi Palaniswami

By

Published : Oct 20, 2020, 12:57 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தமிழ்நாடு முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "உதவிகள் வழங்குவதில் தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்களது தாயார் தவசாயி அம்மாள் மறைவிற்கு என் இரங்கல்" எனத் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூரையாடப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:தெலங்கானா வெள்ளத்திற்கு ரூ.10 கோடி நிதி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details