கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி அபார வெற்றி பெற்றது. சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக தெலங்கானா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் பிப்ரவரி மாதம் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார், அதில் 10 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர்.
மகனுக்கு ஐடி துறை, மருமகனுக்கு நிதித்துறை - தெலங்கானா அமைச்சரவை விரிவாக்கம் - தெலங்கானாவில் மகனுக்கு ஐடி துறை
ஹைதராபாத்: தெலங்கானா அமைச்சரவை விரிவாக்கத்தில் சந்தரசேகர ராவ் மகனுக்கும் மருமகனுக்கும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 8) தனது அமைச்சரவையை மீண்டும் விரிவாக்கம் செய்தார். முதல் விரிவாக்கத்திலேயே அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் நேற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதேபோல சந்திரசேகர ராவின் மருமகனும் ஆறாவது முறையாக எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற ஹரிஷ் ராவ்வுக்கு முக்கிய அமைச்சரவையாகக் கருதப்படும் நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று பலரும் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் சபிதா இந்திரா ரெட்டி, சத்யவதி ரதோட் ஆகியோர் முறையே கல்வித் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.