தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏராளமான சலுகை மற்றும் வேலைக்கு உறுதி அளித்தார்.
மேலும் இந்த போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் கூடுதலாக நிவாரணம் அளிக்க உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 55 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
ஏராளமான சலுகை, வேலைக்கு உறுதி: ஆர்.டி.சி. ஸ்டிரைக் முடிவு.! - தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் கைவிடல்
ஹைதராபாத்: 55 நாட்களாக நீடித்த தெலங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் (ஆர்.டி.சி) வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
தெலங்கானாவில் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து போக்குவரத்த தொழிலாளர்கள் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தை சட்ட மீறல் என்று கூறிய முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், தொழிலாளர்களின் 27 அம்ச கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்தார்.
எனினும் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குதல் மட்டுமின்றி போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமும் கைவிடப்ட்டுள்ளதாக தெரிகிறது. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா பாஜக பிரமுகர் மகன் மீது மாடல் அழகி புகார்.!