52 நாட்களாக தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தெலங்கானா அமைச்சரவை கூடி போக்குவரத்துக் கழக பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள அமைச்சரவை குழுக் கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டு இன்று பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களை காவல் துறையினர் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்தி நிறுத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம், இந்த பிரச்னையை தொழிலாளர் ஆணையம் விசாரித்து வருவதால், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பில் மறுபரிசீலனை இல்லை - சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு