தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஏஏ-வுக்கு எதிராக களமிறங்கும் 'தெலங்கானா' - caaa

ஐதராபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கூறியுள்ளார்.

Telangana cabinet resolution seeking to abolish CAA
Telangana cabinet resolution seeking to abolish CAA

By

Published : Feb 17, 2020, 1:42 PM IST

பாஜக தலைமையிலான மத்திய அரசு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details