தெலங்கானாவின் பாஜக மூத்தத் தலைவரும், ஹைதராபாத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தலா ராமச்சந்திர ரெட்டிக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கோவிட் -19 பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாஜக மூத்தத் தலைவருக்கு கரோனா பாதிப்பு! - கைரதாபாத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்தத் தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா
உடனடியாக அவரின் மனைவி, மகன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கரோனா பாதித்த முதல் அரசியல் தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி ஆவர். இதுவரை தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,698ஆக உள்ளது.