தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஏஏவிற்கு எதிராக விரைவில் தீர்மானம்: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் - தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

ஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர ராவ் சிஏஏவிற்கு எதிர்ப்பு
சந்திரசேகர ராவ் சிஏஏவிற்கு எதிர்ப்பு

By

Published : Jan 26, 2020, 1:36 AM IST

Updated : Jan 26, 2020, 7:40 AM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மவுனம் காத்து வந்தார்.

இந்நிலையில், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்தத் திருத்தச் சட்டம் 100 விழுக்காடு தவறான முடிவு என்றும், 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவுக்கு இது நல்லதல்ல எனவும், இதுகுறித்து தாம் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களிடமும் முக்கிய கட்சிகளின் தலைவர்களிடத்திலும் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், ஹைதராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாநில முதலமைச்சர்கள் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும், தெலங்கானா சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பத்ம பூஷண் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் யார்?

Last Updated : Jan 26, 2020, 7:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details