தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டம், புதுப்பள்ளி கிராமத்தின் அருகே ஆட்டோ மீது எதிரே வந்த லாரி கட்டுபாட்டடை இழந்து மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 12 கூலித்தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஆறுபேர் படுகாயமடைந்தனர்.
தெலங்கானாவில் கோர விபத்து: 12பேர் பரிதாபமாக பலி - Telangana accident
ஹைதரபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்தில் 12பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Telangana accident
கோரவிபத்து
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.