தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ. 7000 கையூட்டு: தெலங்கானாவில் கையும் களவுமாக சிக்கிய மருத்துவ அலுவலர்!

கையூட்டு வாங்கியதற்காக ஊழல் தடுப்பு பிரிவினர் தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவ அலுவலரை கைது செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜூலை 23ஆம் தேதி தனது அலுவலகத்தில் 7,000 ரூபாய் கையூட்டுத் தொகையை வாங்கியபோது சிக்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Anti corruption news
Anti corruption news

By

Published : Jul 24, 2020, 2:17 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா):ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்திலுள்ள மருத்துவ அலுவலர் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கேதாவத் பீமா நாயக் என்பவர் மாவட்ட மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார். அவர், கரீம் நகரில் வசித்துவரும் போடெட்டி அசோக் என்பவரிடம் 7,000 ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார்.

இது குறித்த தகவல்கள் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கைரேகைகளைக் கண்டறியும் ரசாயனம் தடவிய பணத்தை அசோக்கிடம் ஊழல் தடுப்பு பிரிவினர் கொடுத்துள்ளனர்.

சோதனையில் சிக்கிய புல்லட் திருடர்கள்

தொடர்ந்து அந்த பணத்தை கோதாவத்திடம் கொண்டு கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவினர் பகல் 2.25 அளவில் மருத்துவ அலுவலரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்து, ரூ.7000 பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தில் இருந்த கைரேகைகள் கொண்டு ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details