தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தந்தையால் சீரழிக்கப்பட்ட மகள்! - தெலங்கானாவில் மற்றுமொரு கொடூரம் - பாலியல் வன்புண்ர்வு

ஹைத்ரபாத்: போதையில் ஐந்து வயது மகளை தந்தையே பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் அளித்த புகாரின்பேரில் குற்றமிழைத்த தந்தையை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

பாலியல் வன்புணர்வு

By

Published : Jun 22, 2019, 9:23 AM IST

Updated : Jun 22, 2019, 9:40 AM IST

தெலங்கானா மாநிலம், நீரேட்மேட் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கடந்த 17ஆம் தேதி அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் குடிப்போதைக்கு அடிமையான கணவர் தனது ஐந்து வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குடிக்கார தந்தையிடம் விசாரணை மேற்கொண்டபோது தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து குஷைகுடா மண்டல காவல் அலுவலர் சிவகுமார் கூறுகையில், தந்தையே, மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவமாகும் என்றார்.

இரண்டு தினங்களுக்கு முன் ஹைத்ரபாத் அருகே 9 மாத குழந்தை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 22, 2019, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details