தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"நான் ஒரு பிகாரி, சொன்ன வாக்கை காப்பாற்றுவேன்" - கூட்டத்தில் முழங்கிய தேஜஸ்வி யாதவ் - நிதிஷ் குமார்

பாட்னா: சொன்ன சொல்லை காப்பாற்றும் பிகாரி நான் என்று பிகாரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.

Tejashwi Yadav
Tejashwi Yadav

By

Published : Oct 25, 2020, 9:49 AM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-கம்யூனிச கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், நேற்று பிகாரின் ஜமுய் என்ற மாவட்த்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் முதலமைச்சரானால், எனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும். நான் ஒரு பிகாரி, சொன்ன சொல்லை காப்பாற்றுபவன். நான் மக்கள் சேவையில் நீண்ட காலம் இருக்கவுள்ளேன், நான் பொய் கூற மாட்டேன்.

நிதிஷ்குமார் அரசில் கல்வி மிக மோசமாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இயலாமையால் மாநிலத்தில் வேலையின்மை ஒரு முக்கியமான பிரச்னையாக மாறியுள்ளது. நிதிஷ்குமார் தனது 15 ஆண்டுகால ஆட்சியில், ​பிகாரை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளார்.

அவரது ஆட்சியில் வேலையின்மை பிரச்னையை சரிசெய்ய எதுவும் செய்யப்படவில்லை. ஊழல் செய்யும் அரசாகவும் போலி வாக்குறுதிகளை உறுதியளிக்கும் ஒரு அரசாகவும் நிதிஷ்குமாரின் அரசு மாறியுள்ளது" என்றும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 'உங்க அப்பாகிட்ட கேளு' - தேஜஸ்வி யாதவை வெளுத்து வாங்கும் நிதிஷ்குமார்

ABOUT THE AUTHOR

...view details