பாட்னா: பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ளது. கட்சிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், ”எந்த மாநிலத்திலிருந்து, யார் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. பிகார் தேர்தலில் வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் தான் பிரதான இடத்தை பிடிக்கும்.
பிகார் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கான முகாந்திரங்கள் இல்லை. அதனால், எவ்வித தேர்தல் வாக்குறுதிகளை அளித்தாலும் அவை பயனற்றதாகவே அமையும். நிதியமைச்சர், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது ஒருபுறம் இருக்கட்டும்... மக்களுக்காக அறிவித்த பொருளாதார சிறப்பு சலுகைகளின் நிலை என்ன?