கரோனா சூழல் குறித்து ஆலோசிக்கும் வகையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பிகார் சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படவில்லை.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கியக் கட்சிக்கு அழைப்பில்லை!
பாட்னா: கரோனா சூழல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அழைப்புவிடுக்கப்படாத நிலையில், மத்திய அரசை அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ்
இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஷோ காண்பிக்கும் வகையில் மட்டுமே இது நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 4 முதல் 5 எம்பிக்கள் வைத்திருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிகார் சட்டப்பேரவையில் 75 எம்எல்ஏக்களையும் 6 எம்எல்சிக்களையும் ராஷ்டிரிய ஜனதா தளம் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு 5 எம்பிக்கள் உள்ளனர்.