பிகார் மாநிலம் ரோக்தஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி நந்தினி குமாரி. இவர், வீட்டு வேலைகள் செய்துவந்தார். இவரது தந்தை ரிக்ஷா ஓட்டுபவர். தாயும் தினக்கூலி செய்பவர். இவர்களின் வாழ்க்கையை கரோனா ஊரடங்கு புரட்டிப்போட்டுள்ளது.
ஊரடங்கால் வருமானம் இழப்பு - ரிக்ஷா ஓட்டும் 14 வயது சிறுமி! - நந்தினி குமார்
ரோக்தஸ்: கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் 14 வயது சிறுமி ரிக்ஷா ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக தாயும், தந்தையும் வேலை இழந்த நிலையில், நந்தினி குமாரின் வீட்டு வேலையும் பறிபோனது. விளைவு, உணவின்றி தவிக்கும் நிலை. இந்நிலையில் நந்தினி, தந்தை செய்த ரிக்ஷா ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். அவர் தமது அனுபவங்களை ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துகொண்டார்.
அது குறித்து அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் காரணமாக, பல கட்டுப்பாடுகள் உள்ளன. எனக்கு வேலை இல்லாததால் நான் ரிக்ஷா ஓட்ட முடிவு செய்தேன். நான் இந்த ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறேன்” என்றார். கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருக்கும் தினக்கூலிகள் வருமானத்தோடு, வாழ்விழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.