தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கின்போது வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட சிறுமி! - வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட சிறுமி

லக்னோ: சித்திரகோட்டில் 14 வயது பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

Teenage Dalit girl raped by man in UP
Teenage Dalit girl raped by man in UP

By

Published : May 5, 2020, 1:07 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ராஜாபூரில் 14 வயதுடைய பட்டியலின சிறுமி ஒருவர் கடந்த திங்கள் கிழமை வயலுக்கு செல்லும்போது 21 வயதுடைய இளைஞரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய அவர், பெற்றோர்களிடம் இச்சம்பவம் குறித்து கூறியதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்கள் மீது தொடரும் அத்துமீறல்!

ABOUT THE AUTHOR

...view details