தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! - தற்கொலை

மல்காஜ்கிரி: தெலங்கானா மாநிலத்தில், நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை

By

Published : May 1, 2019, 12:18 PM IST

தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த சொஹைல் என்ற மாணவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார். பொறியியல் படிப்பில் சேர விரும்பிய அவர், அதற்கான நுழைத் தேர்வை(JEE) எழுதினார்.

இந்நிலையில், நேற்று அவரது அறைக்குள்ளிருந்து துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதனையடுத்து அச்சமடைந்த இவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, சொஹைல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் சொஹைல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மாணவனின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதும், கைத்துப்பாக்கிக்கு அவர் லைசன்ஸ் வைத்திருந்தார் என்பதும் தெரியவந்தது.

நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details