கரோனா (கோவிட் 19) வைரஸை எதிர்கொள்வதில் உலகின் பிற பகுதிகளிலுள்ள நாடுகளும், சீனா, தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.
தென் கொரியாவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்தாலும், இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த தைவானிலும் இதே நிலையே காணப்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் வசித்த பகுதிகள், அவர்களின் பாலினம், வயது, இறப்புகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை சேகரிக்க தென் கொரியா அரசு பிக் டேட்டாவைப் பயன்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. அவர்களின் விவரங்கள் ரகசியமாகவே இருக்கின்றன. அந்த தகவலில் நோயாளி படம் பார்த்த தியேட்டர், உணவு சாப்பிட்ட உணவகம், விழாக்கள் மற்றும் சந்தித்த நபர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் பாதுகாக்கப்படுகிறது.
இதில் சில தகவல்கள் மக்களுக்கு இணையதளம் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த தளம் உள்ளூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தகவல்களுடன் இயக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவைகள் குடிமக்களுக்கு உதவுகிறது.
இதுமட்டுமின்றி ஜி.பி.எஸ், கால் டேட்டா உதவியுடன் அரசாங்கம் பல பயன்பாடுகளை உருவாக்கி, அவற்றை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உடன் இணைத்துள்ளது. இந்த பயன்பாடுகள் நோயாளிகளின் இயக்கத்தை அடையாளம் காண உதவுகின்றன.
குறிப்பாக எச்சரிக்கை உணர்வுடன் மக்கள், இந்தப் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்பதை அடையாளம் காண்கின்றனர். சமூக தூரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். இந்த அரசாங்க வலைத்தளத்தின் தகவல்கள் சுகாதாரப் பணியாளர்களை நடவடிக்கை எடுக்க உதவுகின்றன.
கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் சீனாவில் கரோனா பாதிப்பு வெடித்த சிறிது நேரத்திலேயே, தைவான் ஒரு தேசிய சுகாதார கட்டளை மையத்தை அமைத்தது. நாட்டுக்குள் வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகளுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. தரவுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டது. மேலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகளைத் தடுத்தது.
தேசிய சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள், இடம்பெயர்வு, சுங்கம், மருத்துவமனை வருகைகள், விமான டிக்கெட்டுகளின் க்யூ.ஆர். (QR) குறியீடுகள் போன்ற தகவல்களை இணைப்பதன் மூலம் ஒரு தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சுகாதாரப் பணியாளர்களுக்கு நோயாளிகளின் பயண வரலாற்றைக் கண்காணிப்பதை எளிதாக்கியது. பிக் டேட்டாவின் உதவியுடன், அதிகாரிகள் தனிநபர்களின் சுகாதார நிலையை எல்லை பாதுகாப்பு காவலர்களுக்கு அனுப்ப முடிந்தது. இந்த சுகாதார நிலை செய்திகள் பாஸாக வழங்கப்பட்டன.
கரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் அதிகம் காணப்படுகின்ற பகுதிகளில், அறிகுறி நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு மொபைல் போன் கண்காணிப்பைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டனர்.
தேசிய சுகாதார கட்டளை மையம் முகக் கவசங்களின் விநியோகத்தை அதிகரித்ததுடன், அவற்றின் விலையை கண்காணித்துள்ளது. இதனால் முகக் கவசம் விற்பனை செய்யும் மருந்தகங்கள் குறித்து முழு தகவலும் கிடைத்தது.
சீனாவில், மொபைல் கண்காணிப்பின் உதவியுடன் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இது மற்ற பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதைக் குறைக்க உதவியது. சீன அரசாங்கமும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தியது.
அதன் மூலம் குடிமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தது. அலிபாபா, பைடு மற்றும் ஹவாய் போன்ற பெரிய நிறுவனங்கள் இதற்கு உதவுகின்றன. மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆராய்ச்சிகள் மற்றும் பொது நிர்வாகம் ஒருங்கிணைப்பில் செயல்படுகின்றன.
இதுமட்டுமின்றி அலிபாபா நிறுவனம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நொடிகளில் கரோனா வைரஸைக் கண்காணிக்கும் வழிமுறையையும் வழங்கி உள்ளது. இதன்மூலம் இதுவரை 96 சதவீத துல்லியத்துடன் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களுக்கு உதவும் ரோபோ இது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பெரிதும் உதவுகிறது. வூகானில் வைரஸ் பரவல் குறித்து முதலில் எச்சரித்தது ப்ளூ டாட் நிறுவனம்தான். இந்நிறுவனத்தின் 40 ஊழியர்களில் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், தொற்று நோய் நிபுணர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் உள்ளனர்.
சீனாவில் 80 விழுக்காடு பரிவர்த்தனைகள் பணமில்லாமல் டிஜிட்டல் முறையில் நடப்பவை. அவை அலி பே மற்றும் வெச்சாட் போன்ற பயன்பாடுகள் மூலம் செய்யப்படுகின்றன. சீன அலுவலர்கள் இந்தத் தரவை அதன் குடிமக்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்துகின்றனர்.
சீனர்கள் கண்காணிப்புக்கு முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்த முக அங்கீகார கேமராக்கள் இப்போது தனிநபரின் உடல் வெப்பநிலையைக் கண்டறிய வெப்ப சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்ஸ் டைம் என்ற நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை இயக்குவதற்கான மென்பொருளை வழங்குகிறது. சிச்சுவான் மாகாணத்தில் வெப்ப சென்சார்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் ஹெல்மெட் விநியோகிக்கப்பட்டது.
பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் போன்ற அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, சீன அரசு சுகாதாரக் குறியீடு எனப்படும் விரிவான சுகாதார கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது.
கரோனா நோயாளிகளின் பயண வரலாறு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு காலம் ஆகியவற்றைக் கண்காணிக்க இந்த குறியீடு அரசாங்கத்திற்கு உதவுகிறது. அலி பே மற்றும் வெச்சாட் பயன்பாடுகள், மக்கள் தனிமைப்படுத்த முடியுமா அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.
அவைகள் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை குறியீடுகள் பயன்படுகின்றன. குடிமக்கள் தங்கள் பகுதியின் வண்ண குறியீட்டை சரிபார்த்து, அவர்கள் தனிமைப்படுத்தலைத் தொடர வேண்டுமா என்றும் தீர்மானிக்கலாம்.
இவைகள் ஒருபுறம் இருக்க கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய சீனா, அமெரிக்க, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் முயற்சித்துவருகின்றன. சீனாவுக்கு உதவியாக ஹவாய் உள்ளது.
இந்த சோதனைகள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. இந்த நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டறிய ஓராண்டு வரை ஆகலாம். இருப்பினும் இஸ்ரேலிலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கிறது.
அங்குள்ள நிறுவனம் ஒன்று கோழியின் சுவாசக் கோளாறுகளை கண்டறிய ஆராய்ச்சியை தொடர்ந்துவருகிறது. இது கிட்டத்தட்ட கரோனா வைரஸ் பரிசோதனையை ஒத்து உள்ளது. இந்த ஆராய்ச்சி வெற்றிப்பெறும்பட்சத்தில் கரோனா (கோவிட்19) பாதிப்புக்கு மூன்று மாதங்களில் மருந்து கிடைக்கும்.
இதற்கிடையில் நோயாளிகளுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பது அவசியம் ஆகிறது. எனவே நோயாளிகளை சுத்தம் செய்ய ரோபோக்களை பயன்படுத்தலாம். ஏனெனில் வைரஸால் ரோபோக்களை ஒன்றும் செய்ய இயலாது.
இந்த வகை ரோபோக்களை சீனாவைச் சேர்ந்த புடு டெக்னாலஜி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அவை நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க பயன்படுத்தப்படுகின்றன.
டெர்ரா நிறுவனம் தயாரித்த ட்ரோன்கள் சோதனை முடிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட உபகரணங்களை வழங்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகள் தொடர்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம், பிக் டேட்டா என்னும் தரவுகள் சேகரிப்பு மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழியாக கண்காணிப்பு ஆகியவை மூலம் கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் வைக்கலாம்.!
இதையும் படிங்க: கரோனா அச்சத்தை காசாக்கும் மருத்துவ நிறுவனங்கள்!