தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் வகுப்பறையில் புகைபிடித்த ஆசிரியர் இடைநீக்கம் - teacher smoking in class goes viral

சீதாபூர் (உ.பி): வகுப்பறைக்குள் புகைபிடித்த பள்ளி ஆசிரியரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

teacher smoking viral

By

Published : Oct 6, 2019, 12:43 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து புகைபிடித்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பள்ளி வகுப்பறையில் புகைபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சீதாபூர் மாவட்ட கல்வி அலுவலர் அஜய் குமார் வீடியோவில் உள்ளவர் ஆசிரியர் என்று உறுதிசெய்த பின்னரே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.

பள்ளியில் புகைபிடிக்கும் ஆசிரியர்

மேலும், வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் புகைபிடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், ஆசிரியர்களின் செயல்பாடுகள் மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: முன்னாள் மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details