தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் விநோத காரணம் சொல்லி விடுப்பு கேட்ட பேராசிரியர்! - Maharashtra political tussle

மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற திடீர் அரசியல் திருப்பத்தைக் காரணம் காட்டி, கல்லூரி ஆசிரியர் ஒருவர் விடுப்பு கேட்டுள்ள விநோத சம்பவம் சந்தாபூர் பகுதியில் நடந்துள்ளது.

Letter

By

Published : Nov 24, 2019, 11:04 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் சந்தாபூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், வசித்து வருபவர் ஜாகீர் சயித். அங்குள்ள சாவித்திரபாய் பூலே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஜாகீர் சயித், தனது கல்லூரி முதல்வருக்கு எழுதிய விடுப்புக் கடிதம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகத் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர் ஜாகீர் சயித்

இந்த அதிர்ச்சியில் சிவசேனா, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாதிக்கப்பட்டது போலவே, கல்லூரி ஆசிரியர் ஜாகீர் சயிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தனது கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதிய ஜாகீர், தன்னால் இந்த திடீர் திருப்பங்களிலும் அதிர்ச்சியிலும் இருந்து மீள முடியவில்லை. எனவே ஒரு நாள் விடுப்பு வேண்டும் எனவும் கடிதம் எழுதி, கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

பேராசிரியர் எழுதிய விடுப்புக் கடிதம்

ஜாகீர் எழுதிய விடுப்புக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே, தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார் சயீத்.

இதையும் படிங்க: சாமி சிலையின் கிரீடத்தை களவாடிய நபர்; சிசிடிவி காட்சி வெளியாகியது!

ABOUT THE AUTHOR

...view details