தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனித சங்கிலியின்போது ஆசிரியர் உயிரிழந்த பரிதாபம்! - மனித சங்கிலியின்போது ஆசிரியர் உயிரிழந்த பரிதாபம்

பாட்னா: பிகார் அரசு சார்பாக நடத்தப்பட்ட மனித சங்கிலியின்போது ஆசிரியர் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bihar
Bihar

By

Published : Jan 20, 2020, 11:42 AM IST

நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலியை நடத்திவருகிறது. மதுவிலக்குக்கு ஆதரவு கோரிய மனித சங்கிலியை பிகார் அரசு 2017ஆம் ஆண்டு நடத்தியது. இந்நிலையில், காலநிலை மாற்றம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகின் நீளமான மனித சங்கிலியை அரசு நடத்தியது.

இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். மனித சங்கிலி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அரசுப் பள்ளி ஆசிரியரான முகமது தாவுத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மருத்துவமனை

இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில், "மாணவர்களுடன் மனித சங்கிலியில் கலந்துகொண்ட ஆசிரியர் உயிரிழந்தார். இது துரதிர்ஷ்டவசமான சம்பவம். மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆசிரியரின் குடும்பத்திற்கு உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கை: அல்வா கொடுக்கத் தயாராகும் நிதியமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details