சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மதர்ஸா கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், 9 வயது சிறுமிக்கு அரபு கற்றுக் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த ஆசிரியர் கைது! - சிறுமியின் வீட்டிற்கு அரபு கற்றுக்கொடுக்க வந்த ஆசிரியர்
ராய்ப்பூர்: சிறுமியின் வீட்டிற்கு அரபு கற்றுக்கொடுக்கச் சென்ற ஆசிரியர், அச்சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
rape
சுமார் 15 நாள்களாக வீட்டிற்கு அரபு சொல்லி கொடுக்க சென்ற ஆசிரியர், பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மூன்று பிரிவுகளின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆசிரியரைக் கைது செய்தனர்.