இதுகுறித்து அவர் பேசுகையில், "ஆந்திர அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள், போலியான கிருமிநாசினியை வாங்கியது எனப் பல ஊழல் வேலைகளில் அரசு ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில், ஆந்திரச் சட்டப்பேரவையில் நடந்த நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தின்போது சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசின் மறு முகத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் தீபக் ரெட்டிக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டதாகவும், அதனால் அவர் தனிமைப்படுதிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தெலங்கானாவில் ஏற்கனவே தீபக்குக்கு எடுக்கப்பட்ட இரண்டு பரிசோதனைகளில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.