தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சோகக் கதை!

பீகார்: காசநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வறுமையின் காரணமாக தன் குழந்தைகளை விற்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசநோய் பாதிக்கப்பட்ட பெண்

By

Published : Aug 13, 2019, 6:18 AM IST

பீகார் மாநிலத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வறுமையின் காரணமாக தன் இரு குழந்தைகளையும் விற்க அவர் முயற்சி செய்திருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "நான் யாரிடமும் உதவி பெறவில்லை. நான் எப்போது இறப்பேன் என எனக்கு தெரியவில்லை. எனவே, எனக்கு யார் பணம் தருகிறார்களோ அவர்களிடம் நான் என் குழந்தைகளை விற்கப்போகிறேன்" என்றார். வறுமையின் காரணமாக சொந்த குழந்தைகளை விற்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details