தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ரஃபேல்-அம்பானி தொடர்பு' முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சுபோடும் செயல் - பாதுகாப்பு அமைச்சகம் - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

புதுடெல்லி: ரஃபேல் போர் விமான விவகாரத்தில் அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக தி இந்து ஆங்கில நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

ரஃபேல்-அம்பானி தொடர்பு

By

Published : Apr 15, 2019, 1:51 PM IST

Updated : Apr 15, 2019, 2:52 PM IST

ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அனில் அம்பானிக்குச் சொந்தமான பிரெஞ்ச் தொலைத்தொடர்பு நிறுவனத்தக்கு 143.7 மில்லியன் யூரோ (ரூ.1,120 கோடி) வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் குற்றம்சாட்டியிருந்தது. இதை பாதுகாப்பு அமைச்சகம் இன்று மறுத்துள்ளது.

அனில் அம்பானியின் பிரெஞ்ச் நிறுவனமான ரிலையன்ஸ் அட்லாண்டிக் ஃபிளாக் பிரான்ஸ் நிறுவனத்தின் 143 மில்லியன் யூரோ மதிப்பிலான உடைமைகளுக்கு 60 மில்லியன் யூரோ (470 கோடி) வரி விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்நிறுவனத்துக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக பிரபல ஆங்கில நாளேடான ஹிந்து குற்றம்சாட்டியது. பிரான்ஸ் நாட்டு பத்திரிகையான லா மாண்ட்டை சுட்டிக்காட்டி இந்த செய்தியை தி ஹிந்து வெளியிட்டிருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், 'அம்பானியின் வரி விலக்கிற்கும் ரஃபேல் விவகாரத்துக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை' என திட்டவட்டமாக கூறியுள்ளது.

Last Updated : Apr 15, 2019, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details