குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. டெல்லி கலவர நிகழ்வில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரி அப்போது வலியுறுத்தப்பட்டது.
'மக்கள் ஒற்றுமையுடன் வாழ குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' - குடியுரிமை திருத்தச் சட்டம்
புதுச்சேரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி மில் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். நாட்டில் மீண்டும் அமைதி ஏற்பட, மக்கள் ஒற்றுமையுடன் வாழ, குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டுமின்றி என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றையும் மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மாநிலம் தழுவிய பேரணி!