தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதச்சார்பின்மையை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்- வெங்கையா நாயுடு - மதச்சார்பின்மை

டெல்லி: ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

Venkaiah Naidu

By

Published : Sep 5, 2019, 2:43 PM IST

நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பல தலைவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆசிரியர் தின வாழ்த்து கூறுகையில், "இந்தியா எப்போதும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. அவர்களை குரு என்று தான் அழைக்கிறோம். சமஸ்கிருதத்தில் குரு என்றால் ஒளியூட்டுதலின் மூலமாகும்.

நம் முன்னோர்கள் அனைவரும் குருகுலமுறைப்படி பயின்றவர்கள். அந்த அமைப்பில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக வாழ்ந்து, அக்கறை மிகுந்த சூழலில் கல்வி கற்றார்கள். ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்.

அவ்வப்போது நமது சிறப்பான வரலாற்றையும் மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். இப்போது இருப்பதைவிட வேறொரு பரிணாமத்திற்கு நம் கல்வி அமைப்பை எடுத்துச் செல்ல வேண்டும். தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details