தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் டாஸ்மாக் இயங்க தடையில்லை - உச்ச நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம்

டெல்லி: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இயங்க தடைவிதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் இயங்க தடையில்லை- உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் இயங்க தடையில்லை- உச்ச நீதிமன்றம்

By

Published : Jul 28, 2020, 2:16 AM IST

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியது. இதனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதிமுதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அதனை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான இடைக்கால உத்தரவு தொடரும் என்றும், டாஸ்மாக் விவகாரம் தொடர்பான பொதுநல மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details